22 Aug 2014

கஜினி






சுட்டும் விழிச்சுடரே
சுட்டும் விழிச்சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே 
சட்டை பையில் உன் படம் 
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே 
உன் விழியில் விழுந்தேன் 
விண்வெளியில் பறந்தேன் 
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே  கண்விழித்து சொப்பனம் கண்டேன்




மெல்லினம் மார்பில் கண்டேன்  
வல்லினம் விழியில் கண்டேன்  
இடையினம் தேடி அலை என்று 
தூக்கத்தில் உலரல் கொண்டேன் 
தூரலில் விரும்பி நின்றேன்  
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்  
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா 
உன் கண்ணில் நான் கண்டேன் 
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்




சுட்டும் விழிச்சுடரே
சுட்டும் விழிச்சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே 
சட்டை பையில் உன் படம் 
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே 
உன் விழியில் விழுந்தேன் 
விண்வெளியில் பறந்தேன் 
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே  கண்விழித்து சொப்பனம் கண்டேன்





மரங்கொத்தி பறவை ஒன்று
மனங்கொத்தி போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்  
தீயின்றி திரியுமின்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன் 
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணா நீ கோபட்டால் வெயில் அழகு
கண்ணா நீ கோபபட்டால் வெயில் அழகு
சுட்டும் விழிச்சுடரே
சுட்டும் விழிச்சுடரே





பாடியவர்கள்:ஸ்ரீராம் பார்த்தசாரதி பாம்பே ஜெயஸ்ரீ
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்

No comments:

Post a Comment